முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

சருகுமானை துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவர் கைது, துப்பாக்கியுடன் ராணுவ வீரர் தலை மறைவு

By Web Desk

Published on:

---Advertisement---

.

தேனி மாவட்டம் போடி தாலுகா குரங்கணி வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு சருகுமனை துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவர் கைது, வனத்துறை ஊழியரை தாக்கிவிட்டு ராணுவ வீரர் துப்பாக்கியுடன் தலைமறைவு சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போடி அருகே குரங்கணி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு மாடுகள், மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது.

குரங்கணி, நரி பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் பாக்யராஜ் மற்றும் அதே பகுதியில் உள்ள கண்ணன் உள்ளிட்ட இருவரும் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் 2 சருகுமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியுள்ளனர்.

வனப்பகுதியில் தெரிந்த வெளிச்சத்தை வைத்து வனப்பகுதியில் துப்பாக்கியால் சருகுமான் வேட்டையாடிய இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

அப்பொழுது வனத்துறையினரை தாக்கி விட்டு ராணுவ வீரர் பாக்யராஜ் துப்பாக்கியுடன் தலைமறைவாகி விட்டார்.

உடனிருந்த கண்ணனை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

துப்பாக்கியால் சருகுமானை வேட்டையாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.