தேனி மாவட்டம் உப்பார்ப்பட்டி – தப்புக் குண்டு சாலையில் அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.
தப்புக்குண்டு உப்பாரப்பட்டி சாலையில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கு அமைந்துள்ளது.
இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் உப்பார்ப்பட்டி தப்புக்குக்குண்டு சாலையில் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
