தேனி புதிய பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க ரூ.10 கேட்டு அடாவடி வசூலில் ஈடுபடுவது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
தேனி – அல்லிநகரம் நகராட்சியால் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரரால் கொள்ளையடிக்கும் வகையில் கழிப்பறையில் சிறு நீர் கழிக்க 10 ரூபாய் என வசூல் வேட்டை யில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரருக்கு கழிப்பிடத்தை உபயோகிக்கும் ஒரு நபருக்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அவரிடம் கட்டண கழிப்பறை ஊழியர் ரூ.10 கேட்டுள்ளார்.
இது தொடர்பாக நடை பெற்ற உரையாடல் சமூக வலைத்தளத் தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் வீடியோ பதிவில் கழிப்பறை சுகாதாரம் இல்லாமல் இருப்பதும். பொது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வீடியோவில் தெரியவந்துள் ளது.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அந்த வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ளது.