பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் தனியார் மில் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, லட்சுமி புரத்தில் குடியிருந்து வருபவர் கிருஷ்ணசாமி மகன் சிவாஜி.இதே கிராமத்தில் புன்செய் நிலம் உள்ளது.

இந்த நிலத்தின் அருகில் ஏசிவி மில் உரிமையாளர் குமார் என்பவருக்கும் நிலம் இருக்கிறது.
சிவாஜிக்கும் ஏசிவி மில் குமார் என்பவர்க்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவாஜி இரண்டு சக்கர வாகனத்தில், திருப்பதி தோட்டம் என்ற இடத்தில் சென்ற போது இதிலே வந்த ஏசிவி மில் உரிமையாளர் குமார் ஆதரவாளரான சுந்தர்ராஜன், மகன் நவீன், இரண்டாவது மகன், வடபுதுப்பட்டி சிவமுருகன், மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து ஏசிவி குமாரிடம் பிரச்சனைகளை செய்யக்கூடாது என சொல்லி சிவாஜியின் மீது மிளகாய் பொடியை கண்ணில் தூவிவிட்டு இரும்பு கம்பியால் காலில் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இதில் சிவாஜிக்கு கால் முறிவு ஏற்பட்டது. அப்பொழுது சிவாஜியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் மீட்டு சிவாஜியை ஆம்புலன்ஸ் மூலம் தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தென்கரை காவல்துறை வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஏசிவி மில் உரிமையாளர் குமார் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.