தேனி மாவட்டம், போடி தாலுகா, தேசிய நெடுஞ்சாலை 85 ல் கிலோ மீட்டர், 185/4 அனைக்கரைப்பட்டி விலக்கு முதல் தர்மத்துப்பட்டி வரை புறவழிச் சாலை ஏலக்காய் குடோன், கனிமவள கொள்ளை உள்ளிட்டகைகளுக்காக விவசாய நிலங்களை அழித்து நெடுஞ்சாலைத் துறையினர் விவசாயிகளிடம் உரிய அனுமதி, இழப்பீடு வழங்காமல் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் போடி தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளிடம் முறையான அனுமதி பெறாமல் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், 3 1/2 கிலோமீட்டர் சாலை அமைக்கும்படி நடைபெற்று வருகிறது.
மேலும் விவசாயிகளிடம் ஒப்புதல் இல்லாமல் சாலை அமைக்க 136 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணிக்கு திமுக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
நில உரிமையாளர்களிடம் எந்தவித ஒப்புதலும் இல்லாமல் சாலை அமைக்கும் நடைபெற்று வருவதால் போடி தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.