முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

மகன் மீது பொய் வழக்கு போட்ட கல்லூரி நிர்வாகம், மற்றும் காவல் துறையை கண்டித்து இரவு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்.

By Web Desk

Published on:

---Advertisement---

கோவை, சிவானந்தபுரம் சரவணன் (முன்னாள் ராணுவ வீரர்) 57, மனைவி ஜானகி, தனது மகன் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது மகன் சூர்யா 21, போடி சிபிஏ தனியார் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

உயர்கல்விக்கு செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் கேட்டு பெறுவதற்காக இரண்டு முறை கல்லூரிக்குச் சென்றார்.

முதல்வர் மற்றும் அலுவலக ஊழியர்கள் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்காத காரணத்தால் சான்றிதழ்கள் தர மறுத்து விட்டனர்.

சூர்யா பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உயர்கல்விக்காக விண்ணப்பித்தும் செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் இல்லாமல் சேர முடியவில்லை.

கடந்த 1 தேதி ரூ. 2000 ஏற்பாடு செய்து, மகனுக்கு மதிப்பெண் பட்டியலை வாங்க மகன் சூர்யாவிடம் கடிதம் வாங்கிக்கொண்டு தந்தை சரவணன் கல்லூரிக்கு சென்றார். அப்போது செமஸ்டர் மதிப்பெண் பட்டியலை வழங்க அலுவலர் 4000 ரூபாய் கேட்டுள்ளார்.

அப்போது கல்லூரி நிர்வாகத்திற்கும் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கல்லூரி நிர்வாகம் காவலாளியை வைத்து சரவணயை கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த சரவணன் 100க்கு டயல் செய்து புகார் தெரிவித்தார். மீண்டும் மறுநாள் கல்லூரி நிர்வாகத்தின் மீது மகன் சூர்யா (மார்க் ஷீட்) தேவையின்றி லஞ்சம் கேட்டு வைத்திருந்ததாக போடிநாயக்கனூர் சிபிஏ கல்லூரி முதல்வர் மீது தேனி மாவட்ட காவல்துறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ந

சம்பவ இடத்தில் இல்லாத சூர்யா அவருடைய தந்தை சரவணன் மீது கடந்த 4 தேதி போடி நகர சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி உரிய விசாரணையின்றி வழக்குப் பதிவு செய்தார்.

கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மகன் சூர்யா மீது பொய் வழக்கு போட்டு வழக்கு போட்டு வாழ்க்கையை சீரழித்து விட்டதாக கூறி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் சூர்யாவின் தாயார் ஜானகி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தேனி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஜானகியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.