பெசன்ட் நகர் கடற்கரையில் ரெய்னி இண்டஸ்ட்ரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தனியார் நிறுவனத்தின் சார்பில் தூய்மைப்பணித்திட்டம் நடத்தினர்.

சென்னை, திருமுடிவாக்கம் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் அமைந்துள்ள ரெய்னி இண்டஸ்ட்ரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தனியார் நிறுவனத்தின் இயக்குநர் ஆஷா ரத்னராஜ் தலைமையில் தூய்மை பணி திட்டம் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
இதில் ரெய்னி இண்டஸ்ட்ரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் துய்மை பணியில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து துய்மை பணி செய்தனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.