தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, ஜி உசிலம்பட்டி புதுக்குளம் கண்மாயில் விதிமுறைகளை மீறி கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

ஜி உசிலம்பட்டி பகுதியில் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது.
இந்த கண்மாயில் விதிமுறைகளை மீறி பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையோடு ஜேசிபி வைத்து செங்கல் காளவாசல்களுக்கு கிராவல் மண் மற்றும் செம்மண் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.