முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

கேரளாவிற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு யூனிட்டுக்கு 500 ரூபாய் கம்பெனி ஆட்கள் கட்டாய வசூல்

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம், தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி மெட்டு வழியாக
கேரளாவிற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு யூனிட்டுக்கு 500 ரூபாய் கம்பெனி ஆட்கள் கட்டாய வசூல் வேட்டை நடத்தியதால் டிப்பர் லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக கேரள எல்லையான போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி மெட்டு வழியாக தினந்தோறும் தேனி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் எம்சாண்ட், பிசாண்ட், உடைக்கற்கள், உள்ளிட்ட கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கம்பெனி ஆட்கள் என்ற பெயரில் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் லாரிகளை மறித்து யூனிட்டுக்கு 500 ரூபாய் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த டிப்பர் லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கம்பெனி ஆட்களிடம் அடையாள அட்டையை காட்டுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது தேனி மாவட்டம் கனிமவளத்துறையால் வழங்கப்பட்ட நடை சீட்டுகளை கையில் வைத்துக்கொண்டு எங்களுக்கு கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்ல கனிம வளத்துறையால் நடை சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் கம்பெனி ஆட்கள் என்றும் கூறும் நீங்கள் உங்களுடைய அடையாள அட்டையை காட்டுங்கள் என டிப்பர் லாரி ஓட்டுநர், உரிமையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கேரள எல்லைப் பகுதியில் டிப்பர்லாரிகளுக்கு யூனிட்டுக்கு 500 ரூபாய் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.