தமிழக முழுவதும், பொது சுகாதாரம், நீர்பகுப்பாய்வகம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர்-ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆதரவுடன்-வேதியியலாளர்,ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் 114 பேர் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டது.

தமிழக முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆதரவுடன் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் தலா ஒரு வேதியியலாளர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக அந்தந்த மாவட்டங்களில் கடந்த மார்ச் 2025 முதல் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
அனைவரும் அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களின் அறிவுரைப்படி மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் பணியில் சேர்ந்தவர்.
மார்ச் இறுதி வாரத்தில் பணியில் சேர்ந்து பணியாற்றிய 10 நாள்களுக்கு மட்டும் ஊதியம் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த
மூன்று மாதங்களாக (ஏப்ரல்,மே,ஜூன்) ஊதியம் வழங்கப்படவில்லை.
இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.