முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

செக் மோசடி வழக்கில் ஆர்எஸ்எஸ் உமாராணிக்கு பிடிவாரண்ட்

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூரை சேர்ந்த பாண்டியன் மகன் ரமேஷ்.

இவரிடம் பிஜேபி மாவட்ட பொதுசெயலாளர் வினோத் குமார், மனைவிஆர்எஸ்எஸ் பண்பாட்டு பயிற்சி வகுப்பு மாநில இணை அமைப்பாளர் உமாராணி கடன் வாங்கி இருந்தார்.

கடனுக்கு ஈடாக கரூர் வைசியா பேங்க் செக் உமாராணி கொடுத்திருந்தார்.

அவர் கொடுத்த செக்கை ரமேஷ் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று வந்துவிட்டது.

இதனால் உத்தம்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆண்டு செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2022-ம் வருடம் உமாராணிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30.07.25 தேதி உமாராணிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.