மனவளர்ச்சி குன்றிய பெண்ணை 6 கர்ப்பமாக்கி தலைமறைவான குற்றவாளி போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடி தாலுகா, உப்புக்கோட்டைகிராமத்தைச் சேர்ந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது மாலதி (27 ) மனவளர்ச்சி குன்றிய பெண்ணை 6 கர்ப்பமாக்கி தலைமறைவான குற்றவாளி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 27 வயதான பெண் மன வளர்ச்சி குன்றி வீட்டிலே தனிமையில் இருந்து வந்தார்.

இவரை பாலசுப்பிரமணியன் என்ற கரடி (50) வீட்டில் தனிமையில் இருப்பதை தனக்கு சாதகமாக்கி கொண்டு பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்தார்.

இதனால் அந்த பெண் ஆறு மாத கர்ப்பம் அடைந்தார்.
இதனை வெளியில் சொல்ல தெரியாமல் அடிக்கடி வயிறு வலிக்குது என்று தெரிவித்து வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை செய்த போது கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தனர்.
உடனடியாக கடந்த ஜூலை 31 தேதி அவரை தேனி அரசு காணா விளக்கு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
தேனி கானா விளக்கு மருத்துவமனையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு கர்ப்பத்தை கலைத்து விட்டனர்.
தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பமாக்கிய பாலசுப்பிரமணியம் என்ற கரடியை தேடி வருகின்றனர்.