இரட்டைக் குவளை முறையை பயன்படுத்துவதாக 1வது வார்டு கவுன்சிலர் பேரூராட்சி தலைவர் மீது குற்றசாட்டு.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்க்கையன்கோட்டை பேரூராட்சி மொத்தம் 12 வார்டு பகுதிகளை கொண்டதாகும்.பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த முருகன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார் .பேரூராட்சி தலைவர் முருகன் பேரூராட்சியில் நடைபெறும் அரசு திட்டங்கள் குறித்து மற்ற வார்டு கவுன்சிலருக்கு முறையாக தெரியப்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும், இது குறித்து தெரிந்து கேள்வி கேட்டாலும் உங்களுக்கெல்லாம் எதற்கு நான் கூற வேண்டும் நான் தான் தலைவர் நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் எங்கு சென்று வேண்டுமானாலும் என் மீது சொல்லுங்கள் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசுவாதகவும் ,
சாதிய தீண்டாமையில் தலைவருக்கு ஒரு டம்ளர் ,தனக்கு ஒரு டம்ளர் என இரட்டை குவளை முறையை பயன்படுத்துவதாக 1வது வார்டு கவுன்சிலர் சி.என்.பாலு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திமுகவை சேர்ந்த பெண் துணை சேர்மன் என்று பாராமல் ஒருமையில் பேசிவருவதாக ஜானகி குற்றச்சாட்டு
என இன்னும் பல வார்டு கவுன்சிலர்கள் குற்றசாட்டு தெரிவித்து இன்று மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி கூறுகையில் தன்னுடைய வீட்டிற்கு குழாய் இணைப்பிற்கு 20000 வாங்கிக் கொண்டு இதுவரையில் அதற்கான ரசீது வழங்கவில்லை என்றும் தங்களது வார்டு பகுதியில் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும் இது குறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி கேட்டால் தலைவரை சந்தித்து பேசுங்கள் என கூறியுள்ளனர் , கவுன்சிலர் ஜெயந்தி இல்லத்திற்கு செல்லக்கூடிய பொதுபாதையை தலைவர் திட்டமிட்டு தடுத்துள்ளதாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றேன்.இதே நிலை நீடித்தால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிதண்ணீரை ரியல் எஸ்டேட் செய்யும் தனி நபர்களுக்கு விற்பனை செய்வது , இறப்பு சான்றிதழ் வேண்டுமானால் பணம் கொடுத்தால் மட்டும் தான் கிடைக்கும் உள்ளிட்ட அடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சமூக நீதி ஆட்சி கூறிக் கொள்ளும் திமுகவினரே அவர்களுக்குள்ளே ஜாதியை தீண்டாமையை கடைப்பிடிப்பதும் , பெண் துணைச் சேர்மனை என்றும் பாராமல் ஒருமையில் பேசிய தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் திமுக தலைமை கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




