பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயனை மனு கொடுக்க விடாமல் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது
முகாமில் பேரூராட்சி பகுதியில் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கும் விளையாட்டு மைதானம், கூடைப்பந்து விளையாட்டரங்கம்,உள்ளிட்டவைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பலமுறை கார்த்திகேயன் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நீண்ட நாட்களாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பூட்டிய கிடக்கும் விளையாட்டு மைதானம் கூடை பந்தாட்ட மைதானம் உள்ளிட்டவைகளை திறக்க கோரிக்கை மனு அளிக்க வந்தார்.
அப்போது முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயனை மனு கொடுக்கப்படாமல், குட்டர்களை வைத்து பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டி வெளியே அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




