அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு என்றும் தமிழக முதல்வர் துணையிருப்பார். தேனி நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ் ராமச்சந்திரன் பேச்சு.

தேனி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் சார்பில் பொதுக் குழு கூட்டம் மற்றும் ஐம்பெரும் விழா மாநில தலைவர் மகேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் வருவாய் மற்றும் பேரீடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ் ராமச்சந்திரன் அரசு ஊழியர்களுக்கு நம்முடைய
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்றும் துணை இருப்பார் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கையான தொகுப்பு ஊதிய ஊழியர்களை நிரந்தர படுத்தவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறினார்.
இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை , திருச்சி ,சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.