தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா, ஆனைமலையன் பட்டி கிராமத்தில் விவசாயி பட்டா நிலத்தில் கனிமவள கொள்ளை குறித்து ராயப்பன் பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என விவசாயி குற்றச்சாட்டு

ஆனைமலையான் பட்டி கிராமத்தை சேர்ந்த லேட் ஜேசுதாஸ் மகன் ஜான்சன்.இவருக்கு சொந்தமான நிலம் சண்முகா நதி கரையில் பட்டா எண் 227/10 ஏ மற்றும் 227/10 சி ஒன்றை ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த பட்டா நிலத்தில் விவசாயிக்கு தெரியாமலே நாகராஜ் என்பவர் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபிகளை வைத்து கனிம வளங்களை கொள்ளை அடித்துள்ளார்.
இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே பட்டா நிலத்தில் உரிய அனுமதி இன்றி கனிம வளங்கள் கொள்ளை அடித்த நாகராஜ் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்