
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் அருகே உள்ள வேட்டுவன் குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியதால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
ஜெயமங்களம் அருகே வேட்டுவன் குளம் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த கண்மாயில் மீன்கள் செத்து மிதந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வின் போது கலந்து கொள்ளவில்லை மீன் வளத்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் அலுவலக பணியாளர் மட்டும் இந்த ஆய்வின் போது கலந்து கொண்டனர்.