.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா,ஜெயங்கமங்கலம், காந்திநகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஊர்காவலன் கோவில் திருவிழாவில் மூன்று காவலர்களை தாக்கி, கலவரம் செய்தும், பொது சொத்துக்கு சேதம் விளைவித்து, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து காவலர்களை கொலை செய்ய முயற்சித்ததாக சுமார் 50 க்கு மேற்பட்ட ஊர் பொது மக்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் கிரைம் எண் 123/2023 விசாரனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 09-09-2025 தேதி வழக்கில் சம்பந்தப்பட்ட விழா கமிட்டியை சேர்ந்த முருகவேல், ரமேஷ், ஜெயச்சந்திரன்,தவமணி ராஜா உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் பெரியகுளம் வழக்கறிஞர் பாலுமகேந்திரன் ,ஜெகதீசன், சதாம் உசேன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி விடுதலை பெற்றுத் தந்தனர்.
மேலும் இந்த வழக்கில் பொய் வழக்கு போட்ட விசாரணை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.