தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் தாலுகா, மணியம்பட்டி கிராமத்தில் சாலை மற்றும் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணியம்பட்டி கிராமத்தில் சுமார் 1500குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மணியம்பட்டியில் இருந்து சிலமலை செல்லக்கூடிய முக்கிய சாலையான 36 அடி அகலம் கொண்ட சாலை இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 12அடி சாலையாக மாறிவிட்டது
இதனால் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனம் மற்றும் அவசர காலத்தில் மருத்துவ மனைக்குச் செல்லும் வாகனம் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது
மேலும் தனி நபர் சுயநலத்திற்காக மின் கம்பத்தை நடு சாலையில் அமைக்க மின்சாரத்துறை அலுவலர்கள் ஏற்பாட்டில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது
மேலும் கிராம மக்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது




