முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

மணியம்பட்டி ஊராட்சியில் மணல்,மண் சட்ட விரோதமாக கடத்தி செல்வதை தடுத்து நிறுத்த வ பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம், போடி தாலுகா, மணியம் பட்டி ஊராட்சியில் மணல் மற்றும் மண் சட்ட விரோதமாக கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருக்கின்றனர்.

குறிப்பாக மணியம்பட்டி ஊராட்சியில் விவசாய நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு, நீர்நிலை ஒடையில்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுகிறது.

போடி தாலுகா, எரணம்பட்டி, பெட்டிபுரம், மணியம்பட்டி, சிலமலை, ராசிங்கபுரம், சில்லமரத்து பட்டி, சூலப்புரம், உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மணல், கரம்பை மண் நிறைந்து காணப்படுகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தி கனிம வள கொள்ளையர்கள் தினந்தோறும், இரவு பகலாக நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் மற்றும் மண் சட்ட விரோதமாக கடத்தி வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் உள்ள நீர்நிலை ஓடைகள், சாலைகளில் செல்லக்கூடிய டிப்பர் லாரிகளால் தூசு பறந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனங்கள் சென்று வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத் துறைக்கு புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

எனவே கனிம வளங்களை கடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.