ம
சட்ட விரோதமாக நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிமவளத்துறை துணை இயக்குநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி தாலுகா, க.விலக்கு அருகே உள்ள பாலசமுத்திரம் கண்மாயில் அரசின் பொக்கிஷமான மண் மற்றும் மணல் பாதுகாப்பின்றி பட்டப்பகலிலேயே டிராக்டர்கள் மற்றும் பெரிய லாரிகள் மூலம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து கடும் அதிர்ச்சி அடைந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயி தன் நிலத்தில் சிறிதளவு மணல் எடுத்தால்கூட உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் நிலையில், இவ்வளவு பெரிய அளவில் நடைபெறும் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என்பதே பொதுமக்களிடையே எழும் கேள்வியாக உள்ளது.
“மண் என்பது தேசத்தின் உயிர்; அதைக் கொள்ளையடிப்பது இயற்கைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் எதிரான மிகப் பெரிய குற்றம்,” எ
இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறு எடுத்துக்காட்டு தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலச்சங்கம் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் ஜீ,
நகர தலைவர் சிவராமன் ஜீ,
அரண்மனை முத்துராஜ் ஜீ (நகர பொதுச் செயலாளர்),
கனகுபாண்டி ஜீ (நகர அமைப்பாளர்),
ஏழுமலையான் சுரேஷ் ஜீ (நகர செயலாளர்),
அரண்மனை ஜீவா ஜீ (நகர துணை செயலாளர்),
நகர செயற்குழு உறுப்பினர்கள் அரண்மனை செல்வகுமார் ஜீ,
அரண்மனை இராஜ் ஜீ,
மொக்கசாமி (லோடு மேன்),
பூசாரி பேரவையின் ராஜீகண்ணு பலர் கலந்து கொண்டனர்.




