முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

டாஸ்மாக் கடைகளுக்கு தரமற்ற சரக்குகளை வழங்கிவிட்டு ஸ்டிக்கர் தொகை மாதம் தோறும் வழங்கும் முடிவுக்கு பார் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

By Web Desk

Updated on:

---Advertisement---

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தனியார் பார் உரிமையாளர்கள் அரசு மதுபான கடைகளுக்கு தரமற்ற சரக்குகளை கொடுத்தும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஸ்டிக்கர் கட்டணத்தை மாதம் தோறும் வழங்கும் முடிவுக்கு தனியார் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 8 தேதி முதல் கடை மேற்பார்வையாளர்களில் மூலம் டாஸ்மாக் பார்களில் தேனி மாவட்ட டாஸ்மாக நிர்வாகம் சார்பில் டாஸ்மாக் கடைகளில் இருந்து பெறப்படும் 10 ரூபாய் ஸ்டிக்கர் தொகையை தாமாட்டோம். பதிலுக்கு டாஸ்மாக் அலுவலகத்தில் மாதம் தோறும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 81 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 64 கடைகளில் மட்டும் முறையான அனுமதி பெற்று தனியார் பார் செயல்படுகிறது..17 தனியார் பார்கள சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது

தனியார் பார் உரிமைதர்களுக்கு தேனி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காமல் திடீரென்று டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மூலமாக 10 ரூபாய் ஸ்டிக்கர்களுக்காண தொகையை மாதம்தோறும் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபிரியர்கள் அதிகமாக வாங்கும்; பிராண்டுகளை டாஸ்மாக் கடைகளை விட தனியார் பார்களுக்கு (FL2 பார்) நடத்துபவர்களுக்கே முன்னுரிமை அழித்து வழங்கப்படுகிறது. இதனால் டாஸ்மாக் பார்களுக்கு வரும் மதுபிரியர்கள் எண்ணிக்கை வெகுவாக் குறைந்து வருகிறது.

டாஸ்மாக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை ஸ்கேனிங் செய்து விற்பனை செய்யப்படும். மாலை நேரங்களில் பெரும்பாலான நாட்களில் சர்வர் பிரச்சனை என்று விற்பனை தாமதம் ஆகிறது.


டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக் கு விலைக்கு மேல் குவாடருக்கு 5 ரூபாயை அனைத்து கடைகளிலும் உள்ள ஊழியர்கள் அதிகமாக வாங்குகிறார்கள்.

இதுக்குறித்தும் பலமுறை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்படி இருக்கும் நிலையில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கூட உரிமைதாரர்கள் வாங்கும் 10 ரூபாய் வாங்க மும்முரம் காட்டுவது ஏனென்று தெரியவில்லை.

10 ரூபாய் ஸ்டிக்கர்களுக்குகாண தொகையை முடக்கி மாதம் தோறும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஸ்டிக்கர்களுக்குகாண தொகையை முடக்கி மாதம் தோறும் வாங்கும் முறைக்கு தனியார் பார் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே ஸ்டிக்கருக்கான தொகையை தினந்தோறும் வழங்க தனியார் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்