ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் வயர் கயிறு உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தை சேர்ந்த பால்சாமி மகன் தங்க நதி (53).
இவர் கோட்டூர் .தேனி தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வே எண் 822/4 823/1 சுமார் 63 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் 90 தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளார்.
இவருடைய விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கயிறு, வயர், மோட்டார், உள்ளிட்டவைகளை தீ வைத்து எரித்துள்ளனர்.
இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்ய வேண்டுமென விவசாயி தங்க நதி கோரிக்கை விடுத்துள்ளார்.




