தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி முட்டை கடை தெருவில் உள்ள செல்லாயி அம்மன், மண்டு கருப்பு சாமி கோவில் திருவிழாவிற்கு வைக்கப்பட்ட பேனரை அப்புறப்படுத்திய பேரூராட்சி சேர்மன் உத்தரவின் பேரில் ஊழியர்கள் பேனரை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பழனிசெட்டிபட்டி முட்டை கடை தெருவில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மண்டு கருப்பன் சாமி மற்றும் செல்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் திருவிழா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு பேனர்கள் வைத்தனர்.

அந்த பேனரில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி புகைப்படம் இடம் பெறவில்லை என்பதால் ஜாதிய ஆணவத்தோடு அந்த இரண்டு பேனரையும் பேரூராட்சி சேர்மன் மீதுன் சக்கரவர்த்தி பேரூராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உடனடியாக அகற்றி விட்டனர்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மீதுன் சக்கரவர்த்தி, ஜாதிய ஆணவத்தோடு குறிப்பிட்ட சமுதாய மக்கள் கோவில் திருவிழாவிற்கு வைத்த பேனரை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.




