தேனி மாவட்டம் பூதிபுரம் வாழையாத்துப் பட்டி பகுதியில் அரசு அனுமதி இன்றி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த இரண்டு பேரை கைது, 665 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதில் பார் உரிமையாளர் மொக்கைச்சாமி தலைமறைவு ஆகிவிட்டார்
பூதிப்புரம் அருகே அரசு மதுபான கடை எண் 8612 செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபான கடையில் அருகே அரசு அனுமதியின்றி கள்ளச் சந்தையில் மது விற்பனை தினந்தோறும் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் மலரம்மாள் தலைமையில் திடீரென கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை சோதனை செய்தனர்.
அப்போது அரசு அனுமதி இன்றி கள்ள சந்தையில் மது விற்பனை செய்த பூதிபுரம் வாழையாத்துப் பட்டி காமாட்சி மகன் அறிவழகன் (64), சிவன் காளை மகன் காசிமாயன் (43), இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 665 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.
பார் உரிமையாளர் என ராமு தேவர் மகன் மொக்கைச்சாமி தலைமறாகிவிட்டார்.
பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பார் உரிமையாளர் மொக்கைசாமியை தேடி வருகின்றனர்.