முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முறைகேடாக 20 ஆசிரியர்கள் பணி நியமனங்கள்.

By Web Desk

Updated on:

---Advertisement---

தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு 50 லட்சம் வீதம் 20 பணியிடங்கள் நிரப்பி 10 கோடி ரூபாய் வசூல் செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி பணி நியமனம் செய்துள்ளதாக கல்வித்துறை செயலாளர் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இயக்குனருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அரசு ஆணை எண் 165 , 19.9.2019 ன் படி, தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் விதி 2023 பிரிவு 34 கீழ், உபரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது

ஆனால் ஒரு பக்கம் சட்டத்தை இயற்றி விட்டு, மறுபக்கம் அதனை மீறி சட்டத்திற்கு புறம்பாக தேனி மாவட்டத்தில் முறைகேடாக பணி நியமனங்கள் செய்துள்ளனர்.

முறைகேடாக ஆசிரியர் பணி நியமனம் செய்த கல்வித்துறை அதிகாரிகளையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐந்து இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டிய இடத்தில், 5 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என ஆறு பேர் நியமனம் செய்து, போதிய மாணவர் இல்லாத இடங்களில், எமிஸ் நம்பர் இல்லாமல் ஆதார் எண்களை பயன்படுத்தி மாணவர்கள் அதிகம் உள்ளதாக காட்டி பணி நியமனமங்கள் செய்து மோசடி செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர்.

ஆனால் பெரியகுளம் ஒன்றியத்தில் 42 இடைநிலை ஆசிரியர்கள், 4 கைத்தொழில் ஆசிரியர்கள், 1 உடற்கல்வி ஆசிரியர், உபரி ஆசிரியர்களாக உள்ளனர்.

இந்த நிலையில்
தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாகலட்சுமி,
வட்டார கல்வி அலுவலர் வீராச்சாமி, சம்பூர்ண பிரியா, ஹெலன் மெட்டில்டா, மகாலட்சுமி, பாமா, உள்ளிட்டவர்கள் ஓய்வு பெற்ற நேர்முக உதவியாளர் ஜெயசீலன் உதவியோடு தேனி மாவட்டத்தில் முறைகேடாக இடைநிலை ஆசிரியர்கள் 20 பேர் பணி நியமனம் செய்துள்ளனர்.

குறிப்பாக மயிலாடும்பாறை அருகே பாலூத்து துவக்க பள்ளியில் 1 தலைமையாசிரியர், சோலைத் தேவன் பட்டியில் 1 தலைமை ஆசிரியர், ஆர் சி நடுநிலைப் பள்ளியில் 1 ஆசிரியர், கோடாங்கி பட்டி, திருச்செந்தூர் பள்ளியில் 1 தலைமை ஆசிரியர், ஆண்டிபட்டி பாலசமுத்திரம் பள்ளியில் 1 ஆசிரியர், பெரியகுளம் டி. பொம்மிநாயக்கன்பட்டியில் 1 ஆசிரியர், டொம்புச்சேரி திருப்பதி ஞாபகார்த்த நடுநிலைப் பள்ளியில் 1 ஆசிரியர், போடி சவுண்டேஸ்வரி பள்ளியில் 3 இடைநிலை ஆசிரியர்கள், போடி ஆயிர வைசிய துவக்கப் பள்ளியில் 1 இடைநிலை ஆசிரியர், தேவதானப்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் 1 தையல் ஆசிரியர், யூசி நடுநிலைப் பள்ளியில் 1 தையல் ஆசிரியர், பெரியகுளம் அழகர் நாயக்கன்பட்டியில் 1 தலைமை ஆசிரியர், பெரியகுளம் மார்க்கண்டேய நடுநிலைப் பள்ளியில் 1 உடற்கல்வி ஆசிரியர், பெரியகுளம் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் 1 தையல், 1பட்டதாரி ஆசிரியர், கம்பம், உத்தமபுரத்தில் புனித அல்போன்ஸ் பள்ளியில் 1 பட்டதாரி ஆசிரியர், பண்ணைப்புரம் நடுநிலைப் பள்ளியில் 1 தலைமை ஆசிரியர், சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் 1 பட்டதாரி ஆசிரியர், 1 தொழிற் ஆசிரியர், என மொத்தம் தொழிற்கல்வி ஆசிரியர் 2 பேர், உடற்கல்வி ஆசிரியர் 1 நபர், இடைநிலை ஆசிரியர் 8 பேர், தலைமை ஆசிரியர் 8 பேர் என 20 பேர் முறைகேடாக பணி நியமனம் செய்துள்ளனர்.

குறிப்பாக பெரியகுளம் ஒன்றியத்தில் மட்டும் எமிஸ் நம்பர் இல்லாமல் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி 400 மாணவர்கள் போலியாக கணக்கு காட்டி பணி நியமனம் செய்திலதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.