முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

அல்லிநகரம் நகராட்சி மின் மயானத்தில் பணியாற்றிய 5 பணியாளர்களை திடீரென வேலையை விட்டு நிறுத்தி மோசடி

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி அல்லிநகரம் நகராட்சி மின் மயானத்தில் பணியாற்றிய 5 பணியாளர்களை திடீரென வேலையை விட்டு நிறுத்தி மோசடி நடைபெற்ற வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சி பள்ளிவாசல் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகிறது.

இந்த மின் மயானத்தில் பாண்டி, பரமசிவம், பூங்கொடி, வினோத்குமார், ரஞ்சித் குமார், உள்ளிட்ட ஐந்து பேர் பணியாற்றி வந்தனர்.

தற்பொழுது தேனிஅல்லிநகரம் நகராட்சி சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி மின் மயானத்தை டெண்டர் விடாமல், டெண்டர் விட்டதாக கூறி அங்கு பணிபுரிந்த ஐந்து நபர்களையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டனர்.

இவர்கள் மாதம் சுமார் 7000 ரூபாய் சம்பளத்தில் பல ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த நபர்கள் தற்பொழுது செய்வதறியாது தவித்து வருகின்றனர். மின் மயானத்தில் மாதம் 12 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி முறையான ஆவணங்கள் இல்லாமல் மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேனி அல்லிநகரம் நகராட்சி சொந்தமான மின் மயானத்தை டெண்டர் விட்டு அங்கு பணியாற்றிய 5 நபர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.