தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பத்தாவது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளி இங்கு பிறவிலேயே பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் நந்திஸ் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் இன்று பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் நந்திஸ் மொத்த மதிப்பெண்கள் 500க்கு 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

மேலும் இவர் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இவரது தந்தை மணிகண்டன் மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிறவியிலேயே பார்வை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்தது குறித்து போடிநாயக்கனூர் நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் நகராட்சி அலுவலர்கள்மற்றும் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் தேர்வில் முதல் மாணவனாக வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவன் நந்திசை இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
உயர் கல்விக்கு அரசு உதவ வேண்டுமென்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே பள்ளியில் பிறவியிலேயே பார்வையிழந்த மாணவர் நல்லூ கிருஷ்ணன் 446 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
