தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி பேரூராட்சி சேர்மன் தமிழ்ச்செல்வியை பணி செய்யவிடாமல் தடுத்து வரும் துணை சேர்மன் ஞானமணி, பேரூர் செயலாளர் தமிழன் தம்பதிகளின் மகன் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கெங்குவார் பட்டி பேரூராட்சி, ராமர் கோவில் தெருவை சேர்ந்த பேரூராட்சி சேர்மன் தமிழ்செல்வி, கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார்

இவரை கெங்குவார்பட்டி பேரூராட்சி பஜனைமடத் தெருவைச் சேர்ந்த பேரூர் செயலாளர் தமிழன் , துணை சேர்மன் ஞானமணி தம்பதிகளின் மகன் திமுக தேனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன்,என்பவர் பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அதிகாரங்களில் தலையிட்டு வருவதால் ஸ்டீபன் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக
சேர்மன் அறையில் உட்கார்ந்து,
பேரூராட்சியில் எந்தவொரு பதவிலும் இல்லாத ஸ்டீபன், சேர்மன் அறையில் அமர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அதிகார தோரணையில் அழைத்து பேரூராட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அலுவலக சார்ந்த பணிகளை நான் சொல்லும்படி தான் கேட்கனும் என்று உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
அப்போது தமிழ்ச்செல்வி அதிகாரிகளை பார்த்து சேர்மன் என்னிடம் அலுவலக தகவல்கள் தெரிவிக்காமல் ஏன் ஸ்டீபன் தெரிவிக்கிறீர்கள் என்றார்.
பணியாளர்கள் அனைவரும் அவருக்கு பயந்து பதில்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.
மேலும் சேர்மனுக்குரிய அதிகாரங்களில் தலையிட்டும் பெண் தலைவர் என்பதால்
சேர்மன் அறையில் உட்கார விடாமல் ஸ்டீபன் சேர்மன் அறையை முழுவதுமாக பயன்படுத்தி வருகிறார்.
சேர்மன் அறையில் இரட்டை சேர்முறை ஸ்டீபன் அவர்களால் போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சாதியை பற்றி திட்டியதால் சேர்மன் தமிழ்ச்செல்வி தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் மீது பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இனிமேல் இது போல் நடக்க கூடாது என்று இருவரையும் அழைத்து கடந்த பிப்ரவரி 14 தேதி இருவரிடமும் எழுதி வாங்கினர்.
ஆனாலும் ஸ்டீபன் சாதிய பாகுபாடுடன் மீண்டும் மீண்டும்
சேர்மன் அதிகாரங்களில் தலையிட்டு அடிமைப்படுத்தும் வீடியோ ஆதாரங்கள் உள்ளது.
மேலும் சேர்மன் அறையை பயன்படுத்த விடாமலும் சேர்மன் பதவியில் சுதந்திரமாக செயல்பட விடாமல்
தொடச்சியாக தடுத்துக் கொண்டிருப்பதாலும் சாதிய பாகுபாடுடன் சேர்மனை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடும், அவமானபடுத்தும் நோக்கத்தோடும், மரியாதைக் குறைவாக நடத்தியும் சாதிய பாகுபாடுடனும் சாதிய வெறியுடனும் செயல்படும் ஸ்டீபன் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்மன் தமிழ்ச்செல்வி புகார் தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக தேனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் மீது தேவதானப்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது