முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

அரண்மனை புதூர் ஊராட்சி பள்ளப்பட்டி கிராமத்தில் 5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு கிடப்பில் போட்டு வைப்பு

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக ஊராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு 15 வது மத்திய நிதி குழு மானிய மூலமாக 5 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆள்துளை கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் பள்ளபட்டியில் அதிகமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எனவே இது குறித்து அரண்மனை புதூர் ஊராட்சி செயலாளர் பாண்டி இடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.