தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சியில் உள்ள பள்ளப்பட்டி, சத்தியநாதபுரம், பகுதியில் சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் ஆண்களுக்கும், 4 லட்சம் பெண்களுக்கும் கட்டப்பட்டுள்ளது.

இந்த கழிப்பிடம் 2019-2020 ம் ஆண்டு கட்டப்பட்ட கழிப்பிடங்கள் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலே சிதிலமடைந்து இடிந்து விளையும் நிலையில் உள்ளது.

எனவே சத்தியநாதபுரம் விநாயகர் கோவில் அருகில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறையை சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பள்ளபட்டி சத்தியநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.