முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

கடமலை மயிலை ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்ட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தீவிர வசூல் வேட்டை

By Web Desk

Updated on:

---Advertisement---

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்ட தீவிர வசூல் வேட்டை நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, தேனி பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலை மயிலை ஒன்றியம் உள்ளிட்ட 8 ஒன்றியங்கள் இருக்கிறது.

கடவுளை மயிலை ஒன்றியங்களில் சுமார் 18 ஊராட்சிகள் உள்ளது.

இந்த ஊராட்சிகளில் 450 க்கும் மேற்பட்ட கலைஞர் கனவு இல்லம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் கனவு இல்லம் கட்ட சுமார் 3.55 லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தி கடமலை மயிலை ஒன்றியத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் அதே பகுதியை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், மேலாளர் ராஜா மற்றும் கடமலை மயிலை ஒன்றிய வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்களை கைக்குள் வைத்துக்கொண்டு இவர்கள் மூலமாக கலைஞர் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து தந்து விட்டனர்.

கலைஞர் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளிடம் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளனர்.

இன்னும் ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் வசூலி ஈடுபட்டு வருகின்றனர்.


எனவே இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம், கலைஞர் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளிடம் பல லட்ச ரூபாய் வசூல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.