தேனி நகராட்சி ஆணையர் ஏகராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தேனி, அல்லிநகரம் பொம்மைய கவுண்டன் பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள நகராட்சி குடியிருப்பு பகுதியில் தேனி நகராட்சி ஆணையர் ஏகராஜ் குடியிருந்து வருகிறார்.

இன்று தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி நாகராஜ், ஆய்வாளர் ஜெயப்பிரியா, ராமேஸ்வரி மற்றும் போலீசார் அதிரடியாக தேனி நகராட்சி ஆணையர் ஏகராஜ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தேனி நகராட்சி ஆணையர் ஏகராஜ் வீட்டில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்