தேனி மாவட்டம், வீர பாண்டி கவுமாரியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழாவில் திமுக பேரூராட்சி தலைவருக்கான முதல் மரியாதையை வழங்குவதில் வழக்கத்திற்கு மாறாக செய்து ஜாதிய பாகுபாட்டுடன் பேசியதாக அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, செயல் அலுவலர் நாராயணி உட்பட ஐந்து ‘பேர் மீது எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இக்கோயில் சித்திரைத்
திருவிழாவில் தேரோட் டம் கடந்த மே 9 நடந்தது.
அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, கோயில் செயல் அலுவலர் நாராயணி, கணக்கர்கள் பாலசுப்பிர மணி, பழனியப்பன், மேல காரர் வீரமணி ஆகியோர் வீரபாண்டி தி.மு.க., பேரூ ராட்சித்தலைவர் கீதாவுக்கு வழங்க வேண்டிய முதல் மரியாதையை கொடுக்காமல், வழக்கத்திற்கு மாறாக மரியாதை செய்ததாகவும், தட்டிக்கேட்ட பேரூராட்சித்தலைவர் கீதாவை ஜாதிய பாகுபாட்டுடன் பேசி இழிவுப்படுத்தியதாகவும்
புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் திடம் பேரூராட்சி தலைவர் கீதா புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து வீரபாண்டி போலீசார் உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நராயணி, கணக்கர்கள் பாலசுப்பிரமணி, பழனியப்பன், மேலகாரர் வீரமணி உள்ளிட்ட 5 பேர் மீது கூடுதல் எஸ்.பி., கேல்க்கர் சுப்ரமணிய பால்சந்ரா, எஸ்.ஐ.-ராஜசேகர் ஆகியோர் எஸ். சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.