முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

By Web Desk

Published on:

---Advertisement---

பெரியகுளம் விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .. கைது நடவடிக்கை வேண்டி மீண்டும் புகார் மனு

தேனி மாவட்டம், பெரியகுளம் அனுமார் கோவில்தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்த குணமுத்து குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றார்.

இவருடைய 6 வயது மகளை வீட்டின் அருகே உள்ள மதுரை ரோட்டில் பங்களாப்பட்டி பிரிவு அருகில் உள்ள விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 10.6.2025ம் தேதி பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய திறனறித் தேர்வின் மூலமாக தேர்வு செய்து ஒன்றாம் வகுப்பில் பள்ளி கட்டணம் ரூபாய் 13500 செலுத்தி பள்ளியில் சேர்த்துள்ளார்.

பள்ளியில் சேர்த்த முதல் நாளே குணமுத்துவின் மகளை பள்ளியில் வகுப்பறையில் தனியாக உட்கார வைத்திருந்து உள்ளனர் .

இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் குணமுத்து கேட்ட பொழுது முறையாக பதில் ஏதும் சொல்லாமல் சிறப்பு வகுப்பு நடத்தினோம் என்று சொல்லி சமாளித்து விட்டுள்ளனர் . மறுபடியும் இரண்டாம் நாள் மட்டும் மூன்றாம் நாள் என தொடர்ந்து தனிமையில் உட்கார வைத்துள்ளனர் .

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் சிறுமியின் தந்தை குணமுத்து கேட்ட பொழுது குணா முத்துவை பள்ளிக்கு வரவழைத்து அவர் குழந்தைக்கு கட்டிய கல்வி கட்டணத்தை பள்ளி நிர்வாகம் பள்ளியில் வேலை செய்யும் மீனா என்பவர் திருப்பிக் கொடுத்து உங்களது குழந்தையை வேறு ஏதாவது பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.

மேலும் குழந்தையை நல்ல மனநல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது .

இந்த தகவல் அன்று அனைத்து முன்னணி செய்தி சேனல்களில் செய்தியாக ஒளிபரப்பப்பட்டு தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .

பள்ளி கல்வித்துறையின் சார்பில் மேற்படி பள்ளியில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் .

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குணமுத்து பள்ளி நிர்வாகத்திடம் தலைமை ஆசிரியரிடம் பேச வேண்டும் என கேட்டு அவரை சந்தித்துள்ளார் .

அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குணமுத்து என்பவரின் ஜாதி பெயரைச் சொல்லி தரகுறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டி பள்ளியை விட்டு வெளியில் துரத்தி இது போன்று வருவோரை பள்ளிக்குள் அனுமதிக்காதீர்கள் என பள்ளி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் குணமுத்துவின் சமூகத்தை சேர்ந்த ஏராளமானோரை நான் தான் படிக்க வைத்துள்ளேன் . உங்க ஆளுங்களுக்கு நல்லது எதுவும் செய்யக் கூடாது டா என ஒருமையில் பேசி மிரட்டி உள்ளார் .

இது குறித்து குணமுத்து கடந்த ஜூலை 07ம் தேதி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் மீனா, முதலாம் வகுப்பு ஆசிரியர் என அனைவரும் மீதும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு செய்திருந்துள்ளார்.

இந்தப் புகார் மனுவினை காவல் ஆய்வாளர் கீதா அவர்கள் ஜூலை 29ம் தேதி பார்வையிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

6 வயது குழந்தையிடம் சாதி வெறியுடன் நடந்து கொண்ட நபர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதை சுட்டிக்காட்டியும் , இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் இருவரை சேர்க்கக் கோரியும் ஜூலை 30 ம் தேதி தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் குணமுத்து மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.