தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சி கருங்கட்டான் குளத்தில் உள்ள வெள்ளையன் தெருவில் தனிநபர் இடத்தில் பாதாள சாக்கடை கழிவுகளை கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சின்னமனூர் நகராட்சி பகுதியில் உள்ள கருங்கட்டான்குளம் வெள்ளையன் தெருவில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தனி நபர் இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ஆழ்துளைக்கிணறு அமைத்து, மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இதனால் இந்த இடத்தை அந்த தனி நபர் முழுவதுமாக பயன்படுத்த முடியாக சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் இந்த இடத்தில் தான் ஆழ்துளை கிணறு மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது. இந்த இடத்தில் உள்ள தனிநபர் இடத்தில் பாதாள சாக்கடை கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.