.
தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலைக்குண்டு கிராமத்தில்
சோலார் பேனல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்திற்கு இரு பிரிவினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
பூமலைக்குண்டு கிராமத்தில் 89 ஏக்கர் நிலம் சோலார் பேனல் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதில் சோலார் பேனல் நிறுவனம் வாங்கிய நிலத்தில் 55 ஏக்கர் நிலம் போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறி பட்டாவை ரத்து செய்யக்கோரி பூமலை குண்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மற்றொரு பிரிவினர் தங்களுடைய நிலத்தை உரிய பத்திரம், பட்டா,சிட்டா அடங்களுடன் சரியான ஆவணங்களை வைத்து சோலார் பேனல் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளோம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் பூமலைக் குண்டு கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் போக்கு கடந்த 6 நாட்களாக நிலவி வருகிறது.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




