தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பட்டியல் இனத்தை சேர்ந்த ராமசாமி பணியாற்றி வருகிறார்.

இவரை திமுகவை சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா அவர்களது கணவரும், அல்லிநகரம் நகராட்சி 20வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான பாலமுருகன் என்பவர் தன்னை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி , அடிக்க முற்பட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கடந்த ஜூன் 24ம் தேதி நகராட்சி ஆணையாளருடன் வரி வசூல் பணியில் இருந்தபோது பாலமுருகன் தனக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாரஸ்ட் ரோட்டில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு உடனே வரும்படி அழைத்தார்.
அப்போது அங்கு சென்றபோது பேருந்து நிலையத்தில் இருக்கிற இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை எடுத்துச் சொல்லி தீர்மானம் போட்டு 6 மாசம் ஆயிருச்சு இன்னும் எதுக்கு எடுக்கலை என கேட்டார்.
இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் இன்னும் எடுக்கவில்லை.
மேலும் நகர் மன்ற துணைத் தலைவர் நகர் மன்ற தலைவரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறினார் .
இதுல கேட்ட பாலமுருகன் நீயும் நகராட்சி ஆணையாளரும் நான் சொல்வதை கேட்க மாட்டீர்களா என ஒருமையில் ஜாதிப் பெயரைச் சொல்லி அருவருப்பான வார்த்தைகளால் திட்டி பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
எனவே திமுக நிர்வாகி பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி நகர் காவல் துறையினர் திமுக நிர்வாகி பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
திமுக நிர்வாகி பாலமுருகன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திமுக தலைமை தேனி வடக்கு நகர பொறுப்பாளராக நியமனம் செய்தனர் .
திமுகவில் பொறுப்பிலிருந்து கொண்டு ஜாதிய வன்மத்துடன் பேசிய நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா கணவர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை முடிக்கப்பட்டுள்ளது.