தேனி மாவட்டம் திமுக அமைச்சர் ஆவடி நாசர் மருமகன் உத்தமபாளையம் பேரூராட்சி சேர்மன் முகமது அப்துல் காசிம், துணைத் தலைவர் சந்திரனை ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி பேரூராட்சி கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தமபாளையம் பாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் தலைமையில் பேரூராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது பேரூராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் சந்திரன் தன்னை ஜாதிய பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உத்தமபாளையம் பேரூராட்சியில் துணை தலைவர் பக்கத்தில் அமர வைக்காமல் ஜாதிய பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் வரவு செலவு உள்ளிட்ட இதர பணிகளுக்கு அழைப்பது கிடையாது.
இன்று திமுக அமைச்சர் நாசர் மருமகன் உத்தமபாளையம் பேரூராட்சி சேர்மன் ஜாதியை பாகுபாட்டுடன் நடத்துவதாக கூறி துணைத் தலைவர் சந்திரன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.