முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

தேங்காய் பழக்கடை மோதலில் திமுக எம்பி மகன் மண்டை உடைப்பு

By Web Desk

Published on:

---Advertisement---

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வாசலில் தேங்காய், பழம் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் கடைக்காரர்களான தந்தை, மகன் தாக்கியதில் தேனி தி.மு.க., எம்.பி., தங்கதமிழ் செல்வன் மகனின் மண்டை உடைந்தது. தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

மதுரை கே.கே.நகர் லேக்வியூ ரோட்டைச் சேர்ந்தவர் நிஷாந்த் 30. உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞராக உள்ளார்.

கர்ப்பிணி மனைவியுடன் தரிசனம் செய்ய தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தார். கோயில் வாசலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் அப்பகுதி மாணிக்கம் நகரைச் சேர்ந்த சமயமுத்து (56), மகன் மணிகண்ட பிரபுவிடம் (25) பழத்தட்டு கேட்டார்.

கோயில் நிர்வாகம் தரப்பில் ஒரு தேங்காய், இரு வாழைப்பழம், வெற்றிலை கொண்ட தட்டு ரூ.60 என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நிஷாந்திடம் ரூ.90/- கேட்டனர்.அவரும் பணம் கொடுத்து வாங்கினார்.

வாழைப்பழம் லேசாக அழுகி இருந்ததால் வேறு பழம் தருமாறு கேட்டார். அடுத்து தேங்காய் வெடிப்பு ஏற்பட்ட மாதிரி இருந்ததால் வேறு தேங்காய் கேட்டார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரத்தில் சமயமுத்துவும், மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது வீசினர். அருகில் நின்றிருந்த கர்ப்பிணி மனைவி மீது தேங்காய் பட்டுவிடக்கூடாது என்பதற்காக கடைக்குள் சென்று அவர்களை நிஷாந்த் தடுக்க முயன்றார். அப்போது அவர்கள் மர நாற்காலியை எடுத்து நிஷாந்த்தை தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது.

அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தையல் போடப்பட்டது. இதுதொடர்பாக தந்தை, மகனை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.