தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தேர்தலை புறக்கணித்து பேனர் பிளக்ஸ் வைத்துள்ளனர்.

திருமலை நகர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாக சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இதனால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாததால் அனைவரும் ஒருமனதாக வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
எனவே சாலை வசதி, வடிகால் வசதி தெருவிளக்கு வசதிகள் உடனடியாக செய்து தர வேண்டுமென தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் பேனர் அப்பகுதி பொதுமக்கள் வைத்துள்ளனர்




