தேனி மாவட்டம் போடி தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் காமுகுல ஒக்கலிகர் காப்பு மகாஜனத்தின் மாலைக்கோவிலை முத்துக்கண்ணன் கட்டிடம் கட்டித் தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு அத்துமீறி தேவர் சமுதாய விளையாட்டு மைதானம் என பலகை வைத்து, முதியவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் இடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போடி-மீனாட்சிபுரம், காந்தி மெயின் சர்வே வார்டு 12, எண் 475/5 ல் விஸ்தீரனம் 0.03.62-ல் மாலைக்கோவிலும் அதற்கு பாத்தியப்பட்ட நத்தம் காலி மனையிடம் உள்ளது.
இந்த கோவில் இடம் காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட கோவிலாகும். மாலைக் கோவிலைச் சுற்றி இருப்புக் கம்பி மற்றும் தகரத்தால் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
முத்துக்கண்ணன் என்ற காண்ட்ராக்டர் கோவில் இடத்தை ஆக்கிரப்பு செய்யும் நோக்கத்தோடு கோவில் சுற்றிலும் கட்டிடம் கட்டித் தருவதாக த ஐந்து லட்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் அந்த இடத்தில் தேவர் சமுதாய விளையாட்டு மைதானம் என பெயர் பலகை வைத்துள்ளார்.
கோவில் இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதை தட்டி கேட்ட முதியவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், கோவிலை சுற்றிலும் கட்டிடம் கட்டித் தருவதாக 5 லட்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதாமாக அத்து மீறி செயல்பட்டு வரும் முத்துக்கண்ணன் வைத்துள்ள ஆக்கிரமிப்பு போர்டை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் இடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.