தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்டது . சென்னைக்கு அடுத்தபடியாக பாதாள சாக்கடை திட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதியில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது .

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் திமுகவில் இணைந்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளைக் கொண்ட தேனி மாவட்டத்தின் பெரும் பகுதியாகும்.
பெரியகுளம். ஓருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்தபோது தேனி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வந்தது.
பின்னர் தேனி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு தேனி தலைமை இடமாக கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களும் தேனி பகுதியில் செயல்பட தொடங்கினாலும் தேனி மாவட்டத்தில் பெரும் பகுதியாக பெரியகுளம் பார்க்கப்பட்டு வருகின்றது.
புதிதாக உருவான பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி நகராட்சி பகுதியையே திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு நகர் கழக செயலாளராக பிரித்து திமுக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று கம்பம் நகராட்சி பகுதியிலும் இரண்டு திமுக நகர் கழக நிர்வாகிகள் உள்ளன . ஆனால் தேனி மாவட்டத்தின் முன்னோடி பகுதியாக செயல்பட்டு வந்த பெரியகுளம் நூற்றாண்டு கண்ட நகராட்சி பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் கழகச் செயலாளராக ஒருவர் மட்டுமே செயல்பட்டு வருகின்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கட்சியை வலு சேர்த்திட பெரியகுளம் நகர் கழகத்தை இரண்டாகப் பிரித்து திமுகவில் இரண்டு மூன்று தலைமுறைகளாக உள்ள மூத்த முன்னோடிகளில் ஒருவரை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு செய்து எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்றிட வேண்டும் .
மேலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தனி தொகுதியாக இருந்து வரும் நிலையில் சமூக நீதி பாதையில் களமாடி வரும் திமுக தலைமை உண்மையான கட்சிக்காக பல்வேறு இன்னல்களையும் , சிரமங்களையும் அனுபவித்த அனுபவம் மிக்க சிறந்த நபரை தேர்வு செய்து அவரை நகர் கழக செயலாளராக அறிவிக்க வேண்டும் என்றும் பெரியகுளம் நகர் பகுதியில் வாழக்கூடிய திமுகவின் மூத்த முன்னோடிகள் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதனை தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆகியோரிடம் கூறினாலும் அவர்களை கட்சியின் செயல்பாடுகளில் ஓரம் கட்டப்படுவதாகவும் தற்போதுள்ள நகர் கழகச் செயலாளர் ஒருவித மனோபாவத்துடன் செயல்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் .
எனவே திமுக தலைமைக் கழகம் இதனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களிடமும் நட்புறவுடன் உள்ள நபர்களை நகர்கழக செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றனர் .
இல்லையென்றால் இனிவரும் காலங்களில் திமுகவிற்கு உண்மையாக இருந்து உழைத்த கழக முன்னோடிகள் கட்சிப் பணிகளில் செயல்படாமல் இன்றும் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நபர்கள் தனது சுய லாப நோக்கத்திற்காக திமுகவை பிற கட்சி நபர்களிடம் விற்றுவிட்டு தனது வயிற்றை நிரப்பி கொள்வார்கள் என்றும் உண்மையாக விசுவாசமாக இருக்கக்கூடிய திமுகவினர் கடைசிவரை உறுதியாக திமுகவிலேயே பயணிப்போம் என்றும் தங்களது கருத்தை முன்வைத்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் தற்போது திமுகவினர் பல்வேறு பிரிவுகளாக சிதறி கிடப்பதாகவும் அவர்களை திமுக தலைமை அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி ஒற்றுமையுடன் செயல்பட்டு பொதுமக்களிடம் நன் மதிப்பை பெற்று எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குகள் சேரும் எண்ணத்தில் செயல்பட வேண்டும் எனவும் திமுக தலைமைக்கு கழகத்தின் மூத்த முன்னோடிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .




