முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதில் கம்பெனி ஆட்கள் கட்டாய வசூல், டிப்பர் லாரி உரிமையாளர்கள் இடையே மோதல்.

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மெட்டு மலை அடிவாரப்பகுதியில் அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ மகன் ஈஸ்வரன் தற்காலிக அலுவலகம் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளை மறித்து ரூ.3 ஆயிரம் கேட்டு கட்டாய வசூல் செய்கின்றனர்.

பணம் கொடுக்கவில்லை என்றால் அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி வட்டாரப் போக்குவரத்து துறை, போலீஸ், வருவாய் துறை கனிமவளத்துறை, அதிகாரிகள் மூலம், கிரஷர் மற்றும் கல்குவாரிகளில் பாஸ் வழங்க விடாமல் செய்து வருகின்றனர்.

மேலும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கனிமவளத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு மாதம் தோறும் மாமூல் கொடுத்து தான் இந்த தொழிலை செய்து வருகிறோம் என மிரட்டுகின்றனர்.

இந்த தொழிலில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தான் தொழிலை செய்து வருகிறோம் என தெரிவிக்கின்றனர்.

இதனால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை காவல்துறை தலைவர், திண்டுக்கல் காவல்துறை துணைத் தலைவர், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கனிமவளத்துறை உதவி இயக்குனர், போடி உத்தமபாளையம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், குமுளி காவல் நிலையம், கம்பம், வடக்கு காவல் நிலையம் போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

டிப்பர் லாரி உரிமையாளர்கள் காஜாமைதீன், ஹானஸ்ட் ராஜ், முஹம்மது அப்பாஸ், முஸ்தபா, உள்ளிட்ட 6 பேர் மீது கம்பெனி ஆட்கள் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, களத்தூர் மித்ரா வயல், ராமநாதன் மகன் ஹரிஷ் ராஜா தம்பி (27) மற்றும் ரவிவர்மா கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விட்டதாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே கேரள மாநிலத்திற்கு உடை கற்கள் மற்றும் கிரஷர் ஏற்றி செல்வதில் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கம்பெனி ஆட்கள் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.