தேனி மாவடடம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை கிழக்குப் பகுதியில் சர்வே எண்.2761,2111 அரசுப் புறம்போக்கு நீர்வழித் தடங்களான ஓடை, வாய்க்கால், பாதையை ஆக்கிரமிப்பு செய்து கோம்பை பேரூராட்சி நிர்வாகம் 1.57 கோடி மதிப்பீட்டில் கடந்த 2025 மார்ச் மாதம் முதல் தார்ச்சாலை அமைக்கும் பணி நடத்தி வருகிறது.

நீர்வழித்தடங்களில் கட்டிடங்கள்,சாலைகள், அமைக்க உயர்நீதிமன்றம், தமிழக அரசும் ப தடை உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகளை குறிப்பிட்டு ஏப்ரல் 2025-ல் புகார் அளித்தும் நீர்வழித்தடங்களில் அமைக்கும் தார்ச்சாலை பணியை நிறுத்தாமல் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

கோம்பை பேரூராட்சி நிர்வாகம் நீர் வழித்தடங்களில் தார்சாலை அமைக்கும் பணிக்கு தடை ஆணை வழங்கிடக் கோரி தேவாரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷணமூர்த்தி சென்னை உயர்நீதிமனற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 17 தேதி நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணை செய்த நீதிபதிகள் கோம்பை பேரூராட்சி நிர்வாகம், நீர் வழித்தடங்களான ஓடை, வாய்கால்,வண்டிப்பாதை பகுதியில் அமைக்கப்படும் தார்ச்சாலை பணிக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் கோம்பை பேரூராட்சி நிர்வாகம், அரசு புறம்போக்கு நீர்வழித்தடங்களான ஓடை,வாய்க்கால்,பாதை, ஆக்கிரமிப்பு செய்து தார்ச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியை நிறுத்திடவும்,நீர்வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள கற்களை அகற்றிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.