சிந்தலை சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பட்டியலின மக்கள் 14 பயனாளிகளுக்கு 2017 ஆம் ஆண்டு வட்டியில்லா ஆடு வளர்ப்பு திட்டத்தில் மானிய கடன், தொகுப்பு வீடுகளை பத்திர பதிவு செய்து வழங்கி உள்ளது.
பின்னர் கடன் வழங்கியவர்களுக்கு மானியம் வழங்காமல் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
தற்பொழுது கடனை கட்டவில்லை என தொகுப்பு வீடுகளை ஜப்தி செய்யப் செய்யப்போவதாக மிரட்டி உள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் தடுத்து நிறுத்தி வீடுகளை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, டி. ஓவுலபுரம், அழகர் நாயக்கன்பட்டி, தேவாரம், லட்சுமி நாயக்கன்பட்டி பல்லவராயன் பட்டி,ஆகிய கிராமங்களை சேர்ந்த பட்டியலின மக்கள் கோவில் சிந்தலைசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 14 பயனாளிகளுக்கு 2017 ஆம் ஆண்டு தாட்கோ மூலம் வட்டியில்லா கடன், ஆடு வளர்ப்பு திட்டத்தில் மானிய கடன் வழங்கப்பட்டது.
இந்த கடனுக்கு ஆதிதிராவிட நலத்துறையால் வழங்கிய, 14 பயனாளிகளின் தொகுப்பு வீடுகளை பத்திரப்பதிவு செய்து 2 லட்சம் ரூபாய் வீதம், 60,000 ரூபாய் மானியம், பயனாளிகளின் பங்குத்தொகை 10,000 ரூபாய் என மொத்தம் 1,30,000 ரூபாய் கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்டது.
தற்பொழுது வேளாண்மை தொடக்க கூட்டுறவு சங்கங்களின் ஆடு வளர்ப்பு திட்டத்தில் வாங்கிய கடன், அபராத வட்டி ரூபாய் என மொத்தம் 3 லட்சம் ரூபாய் என ஒவ்வொரு பயனாளிகளும் கட்ட வேண்டுமென வங்கி அதிகாரிகள் ஆதி திராவிட நலத்துறையால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
எனவே சிந்தலைசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பட்டியலின மக்கள் 14 பயனாளிகளுக்கு 2017 ஆம் ஆண்டு வட்டியில்லா ஆடு வளர்ப்பு திட்டத்தில் மானிய கடன், தொகுப்பு வீடுகளை பத்திர பதிவு செய்து மானியம் வழங்காமல் கடன் வழங்கி மோசடி செய்துள்ளனர்.
தற்பொழுது கடனை கட்டவில்லை என தொகுப்பு வீடுகளை ஜப்தி செய்யப் செய்யப்போவதாக மிரட்டி வருகின்றனர். எனவே தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், வீடுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
