தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் 5 வீடுகளில் உள்ள டிவி, மிக்சி, ஸ்விட்ச் பாக்ஸ் , வெடித்து சிதறி தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டூர் – தர்மாபுரி சாலையில் உள்ள வீடுகளில் உள்ள வீடுகளில் நேற்று அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
அப்போது திடீரென டிவி, மிக்ஸி. ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளிட்டவைகள் வெடித்து சிதறி தீப்பற்றியது.
ஒரு வீட்டில் மட்டும் திடீரென வயரிங் வயிர்கள் முழுவதும் எரிந்து தீ மல மல என எரிய தொடங்கியது.
உடனடியாக சின்னமனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
கோட்டூர் கிராமத்தில் 5 வீடுகளில் திடீரென டிவி, மிக்சி, ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளிட்டவைகள் வெடித்து சிதறி தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது
