தேனி மாவட்டம், வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வரும் தனியார் பாரில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு விதிகளை மீறி தினதோறும் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அருகே உள்ள விவசாய நிலங்களில் மதுப்பிரியர்களால் தூக்கி எறியப்படும் பாட்டில்களால் வயலில் வேலை செய்யும் வயதானவர்கள், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், மதுப்பிரியர்களால் பொதுமக்களுக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தினதோறும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
இதை வீரபாண்டி காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆய்வு நடத்தி, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் தனியார் பாரை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென
புதிய தமிழகம் கட்சி, தேனி ஒன்றியச் செயலாளர் முருகன் புகார் தெரிவித்துள்ளார்.