”C ”கிரேடு சரித்திர பதிவேடு குற்றவாளி திமுக நிர்வாகி ஸ்டீபன் ஜாதி வெறியை கண்டிக்குமா திமுக தலைமை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முத்தனம்பட்டி விநாயகா கன்ஸ்ட்ரக்ஷன் அரசு ஒப்பந்ததாரர் முருகன் மகன் ஆனந்தகுமார் . இவர் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு திட்டங்களை டெண்டர் எடுத்து பணி செய்து வருகின்றார் . இந்த நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்குவார்பட்டி பேரூராட்சியிலும் பல்வேறு பணிகளை எடுத்து வேலை செய்து வருகின்றார் . கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரும் துணைத் தலைவராக மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஞானமணி ஆகியோரும் இருந்து வருகின்றனர். இருவரும் திமுகவைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . துணைத் தலைவர் ஞானமணியின் கணவர் திமுக கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் தமிழன் ஆவார். இவர்களது மகன் வழக்கறிஞர் ஸ்டீபன் திமுக தேனி வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராகவும் இருந்து வருகின்றார் .

திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் இந்த மூன்று பேரும் சேர்ந்து பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தும் அரசு திட்டங்களில் பேரூராட்சி தலைவரை மதிக்காமல் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனை தலைவர் தரப்பினர் தட்டிக் கேட்கவே பட்டியல் சமூகத்தைச் சார்ந்த நீங்கள் எல்லாம் எங்களை எதிர்த்து பேசக்கூடாது என கூறி இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது . வழக்கறிஞர் ஸ்டீபன் 'சி' கிரெடு சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். அவர் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது . இந்த நிலையில் துணைத் தலைவரின் உறவினரான அரசு ஒப்பந்ததாரர் ஆனந்தகுமார் கெங்குவார்பட்டி பட்டிமன்றம் சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் 1.18 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க இணைய வழியில் டெண்டர் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தெரிந்து கொண்ட பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கடந்த 09.08.2025ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் எழுத்தர் ராதா அவர்களிடம் மேற்படி சாலை பணிகளை தொடங்க வேண்டாம் என்றும் முறைப்படி அரசின் அனுமதிகள் பெற்று நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பேரூராட்சி செயல் அலுவலராக இளங்கோவன் (பொறுப்பு ) இருந்து வருகின்றார். இதனைத் தெரிந்து கொண்ட இருவரும் ஒப்பந்ததாரரிடம் தகவலை தெரிவித்து பணியை நிறுத்துவதை விடுத்து விட்டு மறு தினமே மேற்படி பணியை அரசு ஒப்பந்ததாரர் ஆனந்தகுமார், மேற்கொண்டுள்ளார் . இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன்,எழுத்தர் ராதா ஆகியோரிடம் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூர் வார்டு உறுப்பினர்கள் என பலரும் பேசிய நிலையில் ஏற்கனவே பேரூராட்சி திட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் துணை தலைவரின் குடும்பத்தினர் இந்தத் திட்டத்திலும் தங்களது வழக்கமான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலை தொடரவே ஆக. 11ம் தேதி பல்வேறு முறை கோரியும் ஒப்பந்ததாரர் பணியை தொடரவே சம்பவ இடத்திற்கு சென்ற பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பணியை நிறுத்துங்கள் முறையாக அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திமுக நிர்வாகிகளான ஸ்டீபன் , தமிழன், ஞானமணி இவர்களது அடியாட்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி பெண் தலைவரையும், அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர் .
இதனைத் தெரிந்து கொண்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஜாதிய ஆதிக்கம் கொண்ட திமுகவைச் சேர்ந்த தமிழன், ஞானமணி, ஸ்டீபன் உள்ளிட்டோரை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி காட்ரோடு தேனி திண்டுக்கல் கொடைக்கானல் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று துணைத் தலைவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கெங்குவார்பட்டி பிரிவு கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு இரு சமுதாய கலவரமாக மாறத் தொடங்கி இருந்தது . டி எஸ் பி சீராளன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர் . சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இத்தகைய பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தது பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் எழுத்தர் ராதா ஆகிய இருவர் தான் என்றும் நடைபெறவிருந்த சாலைப் பணியை தொடங்குவதற்கு முன்பே நிறுத்த கூறி முறையாக மனு அளித்தும் அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி பிரச்சனையை முடிக்காமல் அரசு ஒப்பந்ததாரர் ஆனந்தகுமார் என்பவருக்கும் ஏற்கனவே பேரூராட்சி நிர்வாக செயல்பாட்டில் ஆதிக்க செலுத்தும் துணைத் தலைவர் குடும்பத்தினருக்கும் ஆதரவாக இவர்கள் இருவரும் செயல்பட்டது தான் இத்தகைய பெரும் பிரச்சனைக்கு காரணம் என உண்மை தெரிந்த திமுக-வினர் புலம்பி வருகின்றனர்.
இதில் பெரும் வருத்தம் என்னவென்றால் அரசு ஒப்பந்ததாரர் ஆனந்தகுமார் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தரப்பினருக்கு எதிராக ஜாதி வெறியர்களுடன் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதும் அவர்களுக்கு ஆதரவாக ஆக்ரோசத்துடன் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இது போன்ற அரசு ஒப்பந்ததாரர்களது உரிமத்தை மாவட்ட நிர்வாகம் உடனடி தலையீடு செய்து உரிமத்தை ரத்து செய்திட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கின்றனர் . இந்தப் பிரச்சனை குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.