தேனி, சமதர்புரத்தில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மாநில தலைவர் அன்புவேந்தர் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் தன்ராஜ் மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் மாநில துணை பொது செயலாளர் உதயசூரியன்,மாவட்ட அமைப்பாளர் கராத்தே பாண்டியன்,மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் பாப்பாத்தி, மற்றும்மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம், இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.





